கோவையில் மனுநீதி அறக்கட்டளை நிறுவனர் மனுநீதி மாணிக்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியபோது, தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சி கொடுக்க வாக்காளர்கள் நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.
நல்லது செய்வேன் என்று எந்த வேட்பாளர் உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுக்கிறாரோ அவருக்கு வேட்பாளர்கள் ஓட்டு போடவேண்டும்.
இதை வலியுறுத்தி வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலம் முழு வதும் பிரச்சாரம் செய்கிறேன்.
கோவையில் பலூன் பறக்கவிட்டு உள்ளாட்சியில் நல்லாட்சி தரவேண்டும் என்ற கோரிக்கையோடு நல்ல வேட்பாளர்களை தேர்ந்து எடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்த வாக்காளர் மத்தியில் எனது பிரச்சாரத்தை தொடங்கி யுள்ளேன்.
வேட்பாளர்கள் பணம் கொடுப்பதும் தவறு வாக்காளர்கள் பணம் வாங்குவதும் தவறு. இந்த உறுதிமொழி பத்திரத்தை சூரியன் சந்திரன் சாட்சியாக நான் கையொப்பம் இட்டுள்ளேன்.
வாக்காளர்கள் இப்படிப் பட்ட வேட்பாளர்களை மட்டும் அடையாளம் கண்டு அதில் நல்லவர்கள் மற்றும் வல்லவர்கள் யார் என்று அடையாளம் கண்டு வாக்களிக்குமாறு மனு நீதி அமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிப்பட்ட வேட்பாளர்கள் ஒருவர் கூட இல்லை என்றால் மீண்டும் தேர்தல் வரும்படி உங்கள் வாக்குகளை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் வழிவகுத்துள்ளது என்பதை மனுநீதி இயக்கம் உங்களுக்கு நினைவூட்டுகிறது. இவ்வாறு அவர் கூறி னார்.



