fbpx
Homeபிற செய்திகள்கல்லூரி ஆசிரியர்கள் கிரிக்கெட் போட்டி: கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி அணி அபார வெற்றி

கல்லூரி ஆசிரியர்கள் கிரிக்கெட் போட்டி: கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி அணி அபார வெற்றி

அண்ணா பல்கலைக்கழகம் 9,10 மற்றும் 11வது மண்டல ஆசிரியர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி (யுனைடெட் டிராபி) பெரியநாயக்கன் பாளையம் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ சக்தி தொழில்நுட்பக் கல்லூரி அணியை வீழ்த்தி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் களமிறங்கிய எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி 10 ஓவர் முடிவில் 85 ரன்கள் எடுத்திருந்தது தொடர்ந்து விளையாடிய ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணியினர் 10 ஓவர் முடிவில் 76 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அடுத்த போட்டியில் கலைஞர் கரு ணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 138 ரன்கள் எடுத்திருந்தது மெக்கானிக்கல் துறையைச் சேர்ந்த உதவி பேராசிரியர் அசோக் குமார் 101 ரன்கள் எடுத்து அணியை பலப்படுத்தினார்.

எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி 22 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் 116 ரன் வித்தியாசத்தில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி அணியினர் வெற்றி வாகை சூடினர்.

போட்டிகள் தொடர்ந்து வரும் வாரங்களிலும் நடைபெறும் என்று கல்லூரியின் உடற்கல்வி துறை இயக் குனர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img