திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பென்னாத்தூர் வட்டம், நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயி கருணாநிதி த/பெ. சின்னக்கண்ணு என்பவரின் 1.8 எக்டர் நிலத்தில் கரும்பு பயிரில் சொட்டு நீர் பாசனம் ரூ.1,90,590 மதிப்பில் 100 சதவீத மானியமும் மற்றும் கரும்பு பயிருக்கு கூடுதல் மானியமாக ரூ.66,655 ஆக மொத்தம் ரூ.2,57,245 மதிப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதையும், கரும்பு கரணைகள் நடவினையும் மாவட்ட கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து, கரும்பு கரணையினை நட்டார்.
வேளாண்மை துறை இணை இயக்குநர் முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.



