திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச் சாவடிகளை பிரித்தல், இடமாற்றம் செய்தல், கட்டிட மாற்றம் செய்தல் மற்றும் பெயர் மாற்றம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிப்படுத்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் இறுதி பட்டியலை வெளியிட்டார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல்ஹமீது, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகநாதன் ஆகியோர் உள்ளனர்.



