fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரியில் குடலிறக்க மருத்துவ ஆலோசனை முகாம்

தர்மபுரியில் குடலிறக்க மருத்துவ ஆலோசனை முகாம்

தர்மபுரி சமூக சேவை சங்கம், கோவை ஜெம் மருத்துவமனை, தர்ம புரி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய குடலிறக்க இலவச மருத்துவ ஆலோசனை முகாம், தர்மபுரி சமூக சேவை சங்கம் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

தர்மபுரி சமூக சேவை சங்கம் இயக்குனர் பங்குத் தந்தை ஜேசுதாஸ் தலை மை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

ஜெம் மருத்துவமனை டாக்டர்கள் முனிகிருஷ்ணன், சங்கர், அமல், பிரசாந்த் ஆகியோர் குடலிறக்க மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். ரோட்டரி சங்கத் த¬ லவர் ரவி, செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முகாமில் 150-க்கும் மேற்பட்டோர் குடலிறக்க பரிசோதனை செய்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர்.

இதில் 50 பேருக்கு குடலிறக்கம் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

முகாம் ஏற்பாடு களை கோவை ஜெம் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் ஆனந்த், தர்மபுரி சமூக சேவை சங்க அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img