தருமபுரி அரசு மருத் துவக்கல்லூரி மருத்து வமனைக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் நேரில் சென்று டாயா லிஸிஸ் பிரிவில் நோயாளி களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து பார்வையிட்டார்.
வார இதழ் ஒன்றில், கடந்த வாரத்தில் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் டாயா லிஸிஸ் பிரிவில் மூன்று நோயாளிகள் இறந்ததாக செய்தி வெளியாகியது.
இச்செய்தியை அறிந்த தரும புரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஷ்வரன் அவர்கள் நேரில் சென்று நோயாளிகளுக்கு வழங்கப் படும் மருத்துவ சிகிச் சை குறித்து தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத் துவமனையின் முதல்வர், கண்காணிப்பாளர், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களிடம் நோயா ளிகள் இறப்பு குறித்து கேட் டறிந்தார்.
மருத்துவமனையிலுள்ள 5 டாயாலிஸிஸ் இரத்த சுத்திகரிப்பு கருவியில் ஒரு நாளைக்கு 15 டாயாலிஸிஸ் நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த இரத்த சுத்திகரிப்பு பிரிவில் 45 நோயாளிகள் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் சிகிச்சை முடிந்த இருவர் வீட்டில் இறந்துள்ளனர். இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி, நோய் தொற்று காரணமாகவே இறந்தார். எல்லா நோயாளிகளுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறதென தெரிவித்தார்கள்.
அதனை தொடர்ந்து, டாயாலிஸிஸ் இரத்த சுத்திகரிப்பு பிரிவு நோயாளிகளிடம் சென்று சிகிச்சை குறித்து கேட்டறிந் தார்.
பின்னர் எலும்பு முறிவு பிரிவு மற்றும் இன்னுயிர் காப்போம் திட்ட சிகிச்சை பிரிவுகளுக்கு சென்ற அவர், எலும்பு முறிவு ஏற்பட்ட அங்குள்ள நோயாளி களிடம் அறுவை சிகிச்சை செய்வது குறித்தும், அதனை தொடர்ந்து வழங்கப்படும் தொடர் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
மருத்துவமனையின் அதிகாரிகளிடம், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஏழ்மை யான சூழ்நிலையில் சிகிச்சைக் காக வருகின்றனர். அவர் கள் மனதளவில் முழு மகிழ்ச்சியடையும் வகையில் சிறப்பான சிகிச்சை வழங்கவும், நோயாளிக ளுக்கு வழங்கப்படும் உணவு தரமாகவும், சுகா தாரமாகவும் வழங்கவும், மருத்துவமனையை தூய்மை யாக வைத்துக்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.
தருமபுரி மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு சிறுநீரக பிரிவிற்கு சிறப்பு மருத்துவர்களை நியம னம் செய்ய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அவர் களை நேரில் வலியுறுத் துவதாகவும் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட அமைப்பு செயலாளர் ப. சண்முகம், நகர செயலாளர் கள் வே.சத்தியமூர்த்தி, கி.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



