தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை – 2021 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர்/ ஆணையர் மற்றும் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதுல் ஆனந்த், தருமபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி முன்னிலையில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வைத்திநாதன், தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், அரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்தையன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) இந்தியா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.



