ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தில் இருந்து கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி மூலம் பெறப்பட்ட வட்டியில்லாக் கடன்களுக்கான தொகையினை, கோபி சரகத்தில் ரூ.1,14,67,400, ஈரோடு சரகத்தில் ரூ.22,99,525 ஆக மொத்தம் ரூ.1,37,66,925-க்கான காசோலையினை, ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.விஜயசக்தியிடம், கோபி சரக துணைப்பதிவாளர் ப.கந்தராஜா, ஈரோடு சரக துணைப்பதிவாளர் கு.நர்மதா ஆகியோர் வழங்கினர்.
அருகில் இணைப்பதிவாளர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்கள் ஆர்.ராஜா, எம்.ஜெயலட்சுமி, ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் நா.வடிவேல்.



