தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று (20ம் தேதி) பதவியேற்றனர். 22ம் தேதி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது.
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த அக்.6, 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிகளில் 153 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் 1421 வார்டு கவுன்சிலர்கள், 3007 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், இந்த கிராம பஞ்சாயத்துக்களில் 23,211 வார்டு உறுப்பினர்கள் ஆக மொத்தம் 27,792 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 12ம் தேதி நடந்தது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சான்றிதழ்கள் வழங்கினர்.
இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அந் தந்த ஊராட்சிகளில் இன்று (20ம் தேதி) பதவி யேற்று வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக 90 வயது மூதாட்டி பெரு மாத்தாள் பதவி ஏற்றுக் கொண்டார். 22 வயதான இளம்பெண்ணும் ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.
கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பதவி யேற்பு விழாவை முன் னிட்டு உள்ளாட்சிகளில் ஷாமியானா போடப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டு காட்சியளிக்கிறது.
கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள் வெள்ளை வர்ணம் பூசப் பட்டு, பளிச்சென்று காட்சியளிக்கிறது. இன்று பதவியேற்றுக் கொண்ட உள்ளாட்சி பிரதி நிதிகள் வருகிற 22ம் தேதி நடக்கும் மறைமுக தேர்தலில் வாக்களிப்பர்.
22ம் தேதி 9 மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், 9 மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், 3002 கிராம பஞ்சாயத்துகளில் துணைத்தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்கிறது.
மறைமுக தேர் தலை முன்னிட்டு பிரச்சினை ஏற்படும் என்று கருதப்படும் இடங்களில் மறைமுக தேர்தலை வீடியோ மூலம் பதிவு செய்யவும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் மாவட்டதேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செய லாளர் சுந்தரவள்ளி உத்தர விட்டுள்ளார்.



