தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவத் துறை அமைச்சர், செயலாளருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஞாயிற்று’கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவத் துறை அமைச்சர், செயலாளருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில், ‘‘தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. குறிப்பாக, வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி, அரசு சார்பில் நடத்தப்படுவதாக அறிவித்துள்ள ‘நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சியின்போது மக்கள் அதிகளவில் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.
மேலும், பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ஊரிலும் கலைநிகழ்ச்சி, விளையாட்டு போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்படும்.
இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சனிக்கிழமைகளில் கொரோனா தடுப்பு மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்படும், என்றார்.



