Homeபிற செய்திகள்தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

தமிழக அரசு வெளியிடப் பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆணையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருத்தியமைத்து, அதன் தலைவராக எஸ்.பீட்டர் அல்போன்சை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

பீட்டர் அல்போன்ஸ் கடந்த 1989 மற்றும் 1991ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தென்காசி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img