fbpx
Homeபிற செய்திகள்தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க ‘மீண்டும் மஞ்சள் பை இயக்கம்’: மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க ‘மீண்டும் மஞ்சள் பை இயக்கம்’: மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மஞ்சள் பை இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மக்கள் துணிப்பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையில், மீண் டும் மஞ்சள் பை இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளி யிட்டிருந்தது.

ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாக பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அவை மக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகளாகும். அதிகப் படியான இந்த பிளாஸ்டிக் மாசு பாட்டினால் பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஒரு முறை மட்டும் பயன்படுத் தும் 14 வகை பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வுகளையும், அதற்கு மாற்றான துணி பைகளை உபயோகிக்கும் பழக்கத்தையும் பொதுமக்கள் இடையே ஏற்ப டுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் மஞ்சள் பை பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சள் பை பரப்புரைக்கான நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, முதல்வர் கூறியதாவது:

“மஞ்சள் பை கொண்டு வந்தால் வீட்டில் ஏதேனும் விசே ஷமா?, பத்திரிகை கொண்டு வந்துள்ளீர்களா? என்று கேட்ட காலம் உண்டு. அதற்கு பிறகு, பிளாஸ்டிக் பை வந்து அதுதான் நாகரீகம், மஞ்சப்பை வைத்திருப்பது கேவலம் என்ற ஒரு சூழல் ஏற்பட்டது. மஞ்சள் பை வைத்திருந்தாலே அவரை பட்டிக்காட்டான் என்று கிண் டல் செய்யக்கூடியவர்கள் உருவானார்கள்.

சினிமாவிலும், தொலைக் காட்சி தொடரிலும் கூட மஞ்சள் பையை ஒருவர் கக்கத்தில் வைத்து வந்தால் அவரை கிராமத்துக்காரர் என்று அடையாளம் காட்டுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில், தங்களது வியாபாரத்திற்காக பல்வேறு நிறங்களில் பிளாஸ்டிக் பைகளை தயாரித்து விற்பனை செய்யும் முயற்சியில் சில நிறுவனங்கள் ஈடுபட்டன. இதனால் மஞ்சள் பை பயன்பாடு குறைந்தது.

சுற்றுச்சூழல் பிரச்சினைதான் மானுடத்தின் மாபெரும் பிரச்சனை. மஞ்சள் பை தான் சுற்றுச்சூழலுக்கு சரியானது. ஆனால், அழகான பிளாஸ்டிக் ஆபத்தானது என்று பரப்புரை செய்த பிறகு, தற்போது துணிப்பை பயன்பாடு மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க தமிழக அரசு ஏராள மான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி,ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட் கள் விற்பனை,தயாரிப்பு போன்றவற் றிற்கு தடை வழங்கப்பட்டது.

மேலும், இதனை மீறி தயாரித்த 130 தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.பிளாஸ்டிக் பயன்பாட்டை மக் கள் குறைக்க வேண்டும்.மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும்.

“அகத்தூய்மை வாய்மைக்கு, புறத்தூய்மை வாழ்வுக்கு” என்ற வைர வரிகளை உருவாக்கி கொடுத்தவர் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். அந்த வழியை அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டும்.

அனைத்து துறைகளிலும் முன் னிலையில் உள்ள தமிழகம், சுற்றுச்சூழலை பராமரிப்பதிலும் முன்னிலை மாநிலமாக திகழ வேண்டும். மஞ்சப்பை என்பது அவமானமல்ல. சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், சுற்றுச் சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், வனத்துறை அமைச்சர் ராமசந்தி ரன், மூத்த அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் இதர அதிகாரிகள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருட்களை தயாரிக் கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்பட கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங் கத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த கண்காட்சியை இன்று மாலை 7 மணி வரை பொது மக்கள் பார்வையிட்டு, அதனை தங்களுடைய வாழ்விலும் உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img