fbpx
Homeபிற செய்திகள்சோமையனூரில் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமிபூஜை

சோமையனூரில் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமிபூஜை

சின்னத்தடாகம் அருகே சோமையனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.

இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். முன்பு கட்டப்பட்ட கட்டிடம் பழுதானதால் அது சமீபத்தில் இடிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை பென்டா ரவுண்ட் டேபிள் அமைப்பானது ரூ.25 லட்சம் மதிப் பீட்டில் இரு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்தை கட்டித் தரமுன்வந்துள்ளது.

நடந்த பூமி பூஜைக்கு வந்திருந்தவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.தமிழ்ச்செல்வி வரவேற்றார். பெரிய நாயக்கன்பாளையம் வட்டார கல்வி அதிகாரி ரங்கராஜ், சின்னத்தடாகம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் டி.என்.வேலுச்சாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

நஞ் சுண்டாபுரம் ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.

கோவை, தரணி பம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தரணி, பென்டா ரவுண்ட் டேபிள் அமைப்பின் தலைவர் பத்ரிநாத் கேசவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பணிகளைத் தொடக்கி வைத்த னர்.

இதில் இந்த அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கரன் ரஹேஜா, தேசியக்குழு உறுப்பினர் ஆர்.மோகன்ராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குமாரசாமி, சோமசுந்தரம், வீரபாண்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாமிநாதன் மற்றும் ஆசிரியைகள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஆசிரியை கௌசல்யா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img