ஷிவ் நாடார் ஃபவுண்டேஷனின் உயர்கல்விக்கான மூன்றாவது முயற்சியான சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், பொறியியல், வணிகவியல், பொருளியல், கணிதம், இயற்பியல் மற்றும் இடைநிலை ஆராய்ச்சி ஆகிய பாடங்களில் அதன் பிஎச்.டி.க்கான சேர்க்கையைத் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு, பல்கலைக்கழகம் ஆங்கில பாடத்தில் பிஎச்.டி.யை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அறிஞர் கள் ஆங்கில இலக்கியம் அல்லது ஆங்கில மொழி கற்பித்தலில் (இஎல்டி) நிபுணத்துவம் பெறலாம்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், பேச்சு தொழில்நுட்பம், தரவு அறிவியல், பயோமெட்ரிக்ஸ், இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் உள் ளிட்ட பலவற்றை உள்ளடக் கிய பாடங்களுடன் இந்த பல்கலைக் கழகம் பிஎச்.டி. பட்டத்திற்கான பரந்த அளவிலான சிறப் புகளை வழங்குகிறது. ஆராய்ச்சி திட்டங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் https://www.snuchennai.edu.in/research என்ற இணையதளத்தில் கிடைக்கும்.
முழு நேர மற்றும் பகுதி நேர முனைவர் பட்டம் வழங்குவதுடன், வளர்ந்து வரும் ஆராய்ச்சியாளர்கள், பொறியியலில் இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்த உடனேயே பிஎச்.டி பட்டப் படிப்பைத் தொடர, பல்கலைக்கழகம் பொறியியல் துறையில் ‘நேரடி பிஎச்.டி’யையும் வழங்கும். நேரடி பிஎச்.டி படிப்பு இரண்டு வருட முதுகலை பட்டப்படிப்புக்குப் பின் பிஎச்.டி. படிப்பிற்குச் செல்பவர்களுடன் ஒப்பிடும்போது திறமையான மாணவர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்தை சேமிக்க அனுமதிக்கும்.
பல்கலைக்கழகத்தில், வளாகத்திற் குள் இலவச தங்குமிடத்தையும், மாதாந்திர உதவித்தொகையாக ரூ.20,000 மற்றும் அவர்களின் ஆராய்ச்சி நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் ஆதரிக்கவும் ஆண் டுக்கு தற்செயல் தொகையாக ரூ.25,000 பெறுவார்கள்.
பெயரளவு வாடகைக்கு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் வளாகத்தில் தங்கும் வசதியுடன் தங்களுடைய ஆராய்ச்சியைத் தொடரக் கூடிய திருமணமான அறிஞர்களுக்குப் பல்கலைக்கழகம் ஒரு சிறப்புப் பரிசீ லனையை வழங்கும்.
பகுதி நேர பிஎச்.டி. கல்வி நிறுவனங்களிலோ அல்லது ஆராய்ச்சி ஆய்வகங்களிலோ முழுநேர ஆசிரியர்க ளாகப் பணி புரியும் விண்ணப்பதாரர்கள், இந்தியாவிற்குள் தொடர்புடைய தொழில்துறையைச் சேர்ந்த முழு நேரப் பணிபுரியும் வல்லுநர்கள் இந்த விருப்பத்தைப் பெறலாம்.
ஆர்வமுள்ள ஆராய்ச்சி ஆர்வலர்கள் தங்களது விண்ணப்பத்தை ஆன்லைனில் 17 ஜூன் 2022-க்குள் https://apply.snuchennaiadmissions.com/ இல் சமர்ப்பிக்க வேண்டும்.
சேர்க்கை செயல்முறை இரண்டு-கட்ட தேர்வு செயல்முறையை பின் பற்றும். இதில் எழுத்துத் தேர்வு மற்றும் குறுகிய பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான நேர் காணல் அடங்கும்.



