சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள செலக் கரச்சல் கிராம பஞ்சாயத்தில், அல்ஸ்டாம் நிறுவனம், யுனைட்டட் வே பெங்களூரு தொண்டு நிறுவனத்துடன் ஒன்றிணைந்து, கல்வி மேம்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு, சுகாதார நிலையில் முன்னேற்றம், சுய உதவிக் குழுக்களுக்கான உதவிகள் ஆகியவற்றை ‘ரூரல் ரை சிங்’ என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில், கிராமங்களில் திடக் கழிவு மேலாண்மைக்கு உதவிடும் வகையில் டிராக்டர் வாகனம் வழங்கப்பட்டது.
சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலு வலர் நவமணி, கிராம பஞ்சாயத்து தலைவர் மரகதவடிவு கருப்புசாமி தொடக்க விழாவில் சிறப் பித்தனர்.
அல்ஸ்டாம் நிறுவன அமைவிடத்தின் நிர்வாக இயக்குநர் செல்வகுமார் பேசுகையில், ‘செலக்கரச்சல் கிராமத்தில் மக்களுடன் இணைந்து யுனைட்டட் வே பெங்களூரு தொண்டு நிறுவனத்தின் உதவியோடு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்.
குறைந்தது 3 வருடங்கள் இது போன்ற தேவை யான திட்டங்களை நிறைவேற்றி மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழும் நிலையையும் மேம்படுத்த முனைகிறோம். இந்த திட்டங்களில் எங்கள் நிறுவனத்தின் பணியாளர்களும் தன்னார்வலர்களாக கைகொடுத்து உதவும் வகையில் ஒரு குழுவையும் அமைத்துள்ளோம்’ என்றார்.
யுனைட்டட் வே பெங்களூரு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராஜேஷ் கிருஷ்ணன் பேசுகையில்,’இங்கு தொடங்கப்பட்ட திட்டம் அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதன் மூலம் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை அனை வருக்கும் விளக்கும் திட்ட மாக அமையும்’ என்றார்.
திட்டத்தின் கீழ் குழந்தை களுக்கு மகிழ்ச்சியான, பாதுகாப்பான அங்கன் வாடி மையங்கள் அமைக் கப்பட உள்ளன. ஏற்கனவே உள்ள 2 மையங்கள் புதுப்பொலிவுடன் சீர மைக்கப்பட உள்ளது.
இம்மையங்களில் சிறந்த கற்றல் சூழல் அமைய ஏதுவாக பணியாளர் களுக்கான பயிற்சி, பெற் றோர்களுக்கான விழிப் புணர்வு போன்றவை ‘பார்ன் லேர்னிங்’ திட் டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.
வரும் காலங்களில் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் மற்றும் கிராமத்து இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திறன் மேம்பாடு மற்றும் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான வழிகள் ஆகிய பயிற்சிகளும், அதற்கான உதவிகளும் வழங்கப்படும். இதன் மூலம் கிராமத்தில் உள்ள சுமார் 6000 மக்கள் பயனடைவார்கள்.



