fbpx
Homeபிற செய்திகள்சுகுணா கல்வி குழும வளாகத்தில் ரூ.2 கோடி செலவில் உருவான ஹாக்கி மைதானம் துவக்க விழா

சுகுணா கல்வி குழும வளாகத்தில் ரூ.2 கோடி செலவில் உருவான ஹாக்கி மைதானம் துவக்க விழா

கோவை காளப்பட்டி அருகே உள்ள சுகுணா கல்வி குழுமம் வளாகத்தில் ரூ.2 கோடி செலவில் ஹாக்கி விளையாட்டு மைதானம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்கவிழா சுகுணா கல்வி குழுமத்தின் தலைவரும், கோவை மாவட்ட ஹாக்கி சங்க தலைவருமான லட்சுமிநாராயணசாமி தலைமையில் நடந்தது.

விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் சேகர் மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய ஹாக்கி மைதானத்தை தொடங் கிவைத்தனர்.

விழாவில் தமிழ்நாடு ஹாக்கி செயலர் செந்தில்ராஜ்குமார், சுகுணா கல்வி குழுமத்தின் செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், சுகுணா கல்வி குழுமம் தாளாளர் திருமதி லட்சுமிநாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து சுகுணா கல்வி குழுமம் சேர்மன் லட்சுமி நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த ஹாக்கி விளையாட்டு மைதானம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.

மாண வர்கள் மற்றும் பயிற்சி விளையாட்டு வீரர்களுக்கு இந்த மைதானம் பயனுள்ளதாக இருக்கும். சுகுணா கல்வி குழுமம் கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியம் கொடுத்துவருகிறது.

மேலும் இந்த வளாகத்தில் பல்வேறு விதமான விளையாட்டு பயிற்சி மையங்களும் உள்ளன. மேற்கண்டவாறு அவர்கள் கூறி னார்கள்.

படிக்க வேண்டும்

spot_img