fbpx
Homeபிற செய்திகள்சிவகாசியில் ஜூனியர் குப்பண்ணா அசைவ உணவகம் திறப்பு

சிவகாசியில் ஜூனியர் குப்பண்ணா அசைவ உணவகம் திறப்பு

அறுபது ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட தென் இந்தியாவின் சிறந்த அசைவ உணவகம் ஜூனியர் குப்பண்ணா, சிவகாசியில் தனது கிளையினை துவங்கியுள்ளது.

உணவக கிளையினை காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் இயக்குநர் ஏ.பி.செல்வராஜ், சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏஎம்எஸ்ஜி அசோகன், தமிழ்நாடு ஹோட்டல்ஸ் அசோசியேஷன் செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு ஹோட்டல்ஸ் அசோசியேஷன் இணைச் செயலாளர் கே.எல். குமார், ஜூனியர் குப்பண்ணா இயக்குநர்கள் மூர்த்தி, ஆறுமுகன், விருதுநகர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் திறந்து வைத்தனர்.

ஒரே நேரத்தில் 64 பேர் அமர்ந்து உணவருந்தக் கூடிய ஏசி வசதியுடன் கூடிய சிறந்த அசைவ உணவகம் பழைய விருதுநகர் சாலையில் அமைந்துள்ளது.

ஜூனியர் குப்பண்ணா சிவகாசி கிளையின் பிரான்சைஸ் உரிமையாளர் மாரியப்பன், இக்கிளை காலை 11.30 மணி முதல் இரவு 11 வரை செயல்படும். 50 வகை அசைவ உணவு வகைகளுக்கு மேல் இங்கு கிடைக்கும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img