கன்னியாகுமரியில் 18 வது மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் டிசம்பர் 28 முதல் 30 வரை நடந்தது.
இதில் கோவை புலியகுளம் இம்மார்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சிலம்பாலயாவில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் 9 பேர் மினி ஜுனியர் பிரிவில் பங்கேற்றனர்.
டபுள் ஸ்டிக் பிரிவில் வித்யா நிகேத் சிபிஎஸ்இ பள்ளி 5ம் வகுப்பு மாணவர் கே.தருண் தங்கப்பதக்கம் வென்றார்.
ஸ்டிக் பைட் பிரிவில் வி.சி.வி.ஷிசு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யுகேஜி படிக் கும் கே.ஏ.நேகஸ்ரீ சிங்கிள் சுருள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அதேபோல அல்வெர்னியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் ஏ.ஜாக்குலின் நேத்ரா சிங்கிள் பைட் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதேபோல ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் 6ம் வகுப்பு படிக்கும் ஏ.நவ்நீத் ஸ்டிக் பைட்டில் வெண்கல பதக்கம் வென்றார்.



