சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மண்டல அளவிலான ஹேண்ட்பால் வீரர்கள் திறன் தேர்வு நடந்தது.

திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 300 மாணவர்கள் பங்கேற்றனர். உடற்தகுதி மற்றும் விளையாட்டுத் திறன் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.எம். ரஹ்மத்கனி தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு நடத்தினர். தேர்வு செய்யப்பட்டவர்கள் செப்டம்பரில் நடைபெறும் மாநில அளவிலான தேர்வுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.



