திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், டெங்கு கொசு ஒழிப்புச் சிறப்பு களப்பணிகளை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் நேரில் ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 90 கண்காணிப்புப் பணியாளர்கள் மூலம் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் வீடு வீடாகச் சென்று கொசுப்புழுக்களை அழித்தல், மருந்து தெளித்தல் மற்றும் புகை பரப்பும் பணிகள் தீவிரப்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும் சிமெண்ட் தொட்டிகள், டயர்கள், தேங்காய் ஓடுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளில் நீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றி, தண்ணீர் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் மொட்டை மாடி மற்றும் சுற்றுப்புறங்களை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.
காய்ச்சல் அறிகுறி இருந்தால் சுயமாக மருந்து உட்கொள்ளாமல், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.
பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்த களப்பணியாளர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.



