Homeபிற செய்திகள்நாமக்கல்லில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி தொடக்கம்

நாமக்கல்லில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி தொடக்கம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் மாநில அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின குத்துச்சண்டை போட்டிகள், நாமக்கல் வேட்டாம்பட்டி பி.ஜி.பி. மெட்ரிக் பள்ளியில் நேற்று தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் மதுபாலன் போட்டிகளைத் தொடங்கி வைக்க, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
இதில் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 38 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,000 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
வெற்றிபெறும் வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன், உடற்கல்வி ஆய்வாளர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img