fbpx
Homeபிற செய்திகள்சி.எம்.ஏ. பவுண்டேஷன் தேர்வில் ஸ்ரீராமகிருஷ்ணா மாணவர்கள் சாதனை

சி.எம்.ஏ. பவுண்டேஷன் தேர்வில் ஸ்ரீராமகிருஷ்ணா மாணவர்கள் சாதனை

சி.எம்.ஏ. பவுண்டேஷன் தேர்வில், ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்திய செலவு மற்றும் கணக்காளர் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ.) கடந்த ஜனவரி 2-ம் தேதி சி.எம்.ஏ. பவுண்டேஷன் தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வை கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பி.காம். சி.எம்.ஏ. துறை முதலாமாண்டு மாணவர்கள் ஜி.யாகேஷ் வர்மா, கே.நந்தா, வி.ராஜ ஸ்ரீ, ஆர்.யுவன்ராஜ், எம்.சுரேந் திரன், கே.ஆர்.சினேகா, எஸ்.ஜெயசூர்யா, எஸ்.எல்.அனிந்தித் ஆகியோர் எழுதினர்.

இவர்கள் அனைவரும் சி.எம்.ஏ. பவுண்டேஷன்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், பி.காம். சி.எம்.ஏ. துறைத்தலைவர் முனைவர் டி.சசிகலாதேவி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img