Homeபிற செய்திகள்கோவையில் குப்பைகள் தரம் பிரிப்பதை அந்தமான் துறைமுகத்தின் தலைவர் ஆய்வு

கோவையில் குப்பைகள் தரம் பிரிப்பதை அந்தமான் துறைமுகத்தின் தலைவர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் பீளமேடு, குப்பை மாற்று நிலையத்தில் தரம் பிரித்து சேகரமாகும் குப்பைகளை வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருவதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் முன்னிலையில் அந்தமான் தலைநகரின் போர்ட் பிளேயர் துறைமுகத்தின் தலைவர் கவிதா உதயகுமார் தலைமையில், நகர்மன்ற உறுப்பினர்களான சாகுல் ஹமீது, லட்சுமி கணேசன், ரவிச்சந்திரன், வெற்றிவேல், பாண்டிசெல்வி, தர்மேந்திர நாராயணன், கருணாநிதி, செல்வராணி, உதவி பொறியாளர் வகாப் அடங்கிய 14 நபர்கள் கொண்ட குழு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

உடன் துணை ஆணையாளர் ஷர்மிளா, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், பொதுசுகாதாரக் குழுத் தலைவர் மாரிசெல்வன், மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, அம்பிகா தனபால், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img