fbpx
Homeபிற செய்திகள்கோவையில் எஸ்டிஜி 5 மாநாடு

கோவையில் எஸ்டிஜி 5 மாநாடு

கோவையில் ‘எஸ்டிஜி 5-ஐ அடைவதற்கான பெண் நட்பு கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஏற்றுக் கொள்வது மற்றும் வலுப்படுத்துவது ’என்ற தலைப்பில் ஒருநாள் மா நில மாநாடு நடந்தது.

கோவை மாவட்ட சமூகநல அலுவலர் பி.தங்கமணி மாநாட்டை துவக்கிவைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வளர்ச்சித் துறை வல்லுநர்கள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர் கள் மற்றும் சமூக அமைப்பு உறுப்பினர்கள் உட்பட 60 பேர் கலந்து கொண்டனர்.

உள்ளீட்டு அமர்வுகளில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் மகளிர் ஆய்வுத்துறை பேராசிரியர் மற்றும் இயக்குநர் டாக்டர் ஜெனெட்டா ரோசலின், உதவிப் பேராசிரியர் டாக்டர் கமலாவேணி மற்றும் திருச்சி வளர்ச்சி ஆலோசகர் பத்மாவதி, சென்னை வளர்ச்சி ஆலோசகர் பி.ராஜா ரெத்தினம் ஆகியோர் நடு வர்களாக இருந்தனர்.

இந்த அமர்வுகள் பாலின சமத்துவம், தற்போ துள்ள பெண்களுக்கான நலக்கொள்கைகள், திட்டங்கள், அதன் அணுகல் மற்றும் அத்த கைய திட்டங்களைத் திட்டமிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் உள்ள பங்கேற்பு முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

சமத்துவம் மற் றும் கண்ணியத்தைப் பெறுவதற்கு பெண்களுக்கு வழிகாட்ட சமூகங்கள் மத்தியில் விளம்பரப்படுத்தப்பட்டது.

தலைமை இயக்குநர் சகோதரி அனிலா மேத்யூ வரவேற்றார்.
கண்காணிப்பு அலு வலர் செல்வி ஜோமி டி.ஜே. நன்றி கூறினார்.

ஜெர்மனியின் கேகேஎஸ்-விஎம் இசட் ஆதரவுடன் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை காரமடையில் உள்ள குட்ஷெப்பர்ட் ஹெல்த் எஜுகேசன் சென்டர் மற்றும் டிஸ்பென்சரி இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

படிக்க வேண்டும்

spot_img