fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஆர்.வி.எஸ் பத்மாவதி குப்புசாமி இலவச ஐஏஎஸ் பயிலகம் துவக்கம்

கோவையில் ஆர்.வி.எஸ் பத்மாவதி குப்புசாமி இலவச ஐஏஎஸ் பயிலகம் துவக்கம்

கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வாழும் ஏழை, எளிய மாணவ மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் அரசு வேலை எளிதாக கிடைக்க உதவிகள் செய்ய வேண்டும் என்று ஆர்.வி.எஸ் அறக்கட்டளையின் தலை வர். கே.வி.குப்புசாமி முடிவுசெய்துள்ளார்.

இதனை நிறைவேற்றுவதற்காக இந்த இலவச ஐ.ஏ.ஸ் பயிலகம் இன்று கல்வி தந்தை கே.வி.குப்புசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இதன் ஆலோசகராகவும் இயக் குநராகவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கற்பூ ரசுந்தர பாண்டியன் நியமிக் கப்பட்டுள்ளார்.

முதல் கட்டமாக குரூப்- 4போட்டித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி அளிக் கப்படும் என்றும் இப்ப யிற்சிக்கு 100 மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
அவர்களுக்கு பிரதி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை 6 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும் ரூ.3000- மதிப்பிலான தரமான பாடக் குறிப்பு நூல்கள் இலவசமாக கொடுக்கப்படவுள்ளது. இந்த மாணவ, மாணவிகளுக்கு மிக உயர்ந்த பயிற்சியளிக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே சென்னை, மதுரை, திருச்சி போன்ற இடங்களிலிருந்து தலைசிறந்த பயிற்சி யாளர்களை அழைத்து வந்து இந்த வகுப்புகள் கண்ணம்பாளையத்தில் அமைத்துள்ள கல்லூரி எம்.பி.ஏ. வளாகத்தில் நடைபெறுகின்றது.

இந்த இலவச பயிற்சிக்கு மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெ டுக்க வரும் 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மேலே குறிப்பிடப்பட்ட முகவரியில் நுழைவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

நுழைவுத்தேர்வு எழுத விரும்புவோர் , தங்கள் கல்விச்சான்று மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தபயிலகத் தொடக்கவிழாவுக்கு கற்பூரசுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் ரேடியன் பயிலக நிறுவனர் ராஜபூபதி, மற்றும் கல்லூரி இயக்குநர் ஸ்ரீவஸ்தன், டாக்டர். பிரபா, டாக்டர். சந்திரிகா கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img