கோவையில் புறநகர் பகுதிகளில் 14 இடங்களில் தீவிர கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தாரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தாரேஸ் அகமது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை மையங்களில் படுக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நல்ல முறையில் செய்ய ப்பட்டுள்ளது. மேலும் கொடிசியா வளாகத்தில் மீண்டும் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு ஏற்படுத் தப்பட்டுள்ளது.
கொடிசியா வளாகம், இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.
கோவை மாவட்டத்தில் ஒமைக்ரான் அலையை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள் ளப்பட்டுள்ளது. ஆர்.டி. பி.சி.ஆர் சோதனையில் சந்தேகத்திற்குரிய மாதி ரிகளை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியின் பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு ஒமைக்ரான் தொற்றை உறுதி செய்ய முடியும்.
சோதனை முடிவுகள் வர கால தாமதம் ஏற்பட்டாலும், முடிவுகளுக்காக காத்திருக்காமல் சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒமைக்ரான் பரவல் உள்ள நாடுகளில் கிடைக் கப்பெற்ற தகவல்களின் அடிப்ப டையில் இந்த வைரஸின் வீரியம் குறைவானது என்றாலும் இங்குள்ள மக்கள் தொகைக்கு வைரஸ் பரவல் வீரியம் எப்படி இருக்கும் என்று சொல்ல இயலவில்லை என்பதால் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.
கோவையில் புறநகர் பகுதிகளில் 14 இடங்களில் தீவிர கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரே மாதிரியான சிகிச்சை கிடைக்க வாய்ப்புகள் கிடைக்கப்படும்.
தொற்று பரவல் வீரியத்தை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து அரசாணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



