கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.10க்குட்பட்ட ஷாஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



