கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 1&1&22 ஐ தகுதி நாளாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டார். அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.
கோவை மாவட்டத்தில் தொகுதிவாரியாக வாக்காளர் களின் எண்ணிக்கை வருமாறு: மேட்டுப்பாளையம் தொகுதியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 739 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 56 ஆயிரத்து 37 பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் 48 என மொத்தம் 3 லட்சத்து 1824 வாக்காளர்கள் உள்ளனர்.
சூலூர் தொகுதியில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 865 ஆண் வாக் காளர்கள் 1லட்சத்து 64 ஆயிரத்து 705 பெண் வாக்காளர்களும் ,65 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3 லட்சத்து 21 ஆயிரத்து 635 வாக்காளர்கள் உள்ளனர்.
கவுண்டம்பாளையம் தொகு தியில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 305 ஆண் வாக்காளர்களும் 2 லட்சத்து 39 ஆயிரத்து 21 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர்கள் 141 என மொத்தம் 4 லட்சத்து 76 ஆயிரத்து 467 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை வடக்கு தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 556 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 71 ஆயிரத்து 748 பெண் வாக்காளர்களும் மூன் றாம் பாலினத்தவர்கள் 41 என மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 345 வாக்காளர்கள் உள்ளனர்
தொண்டாமுத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 381 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 71 ஆயிரத்து 544 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர்கள் 114 என மொத் தம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 39 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை தெற்கு தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 792 ஆண் வாக்காளர்களும் 1லட்சத்து 27 ஆயிரத்து 429 பெண் வாக்காளர்களும் மூன் றாம் பாலினத்தவர்கள் 34 பேர் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 255 வாக்காளர்கள் உள்ளனர்.
சிங்காநல்லூர் தொகுதியில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 456 ஆண் வாக்காளர்கள் 1லட்சத்து 66 ஆயிரத்து 889 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர்கள் 24 பேர் என மொத்தம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 369 வாக்காளர்கள் உள்ளனர்.
கிணத்துக்கடவு தொகுதியில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 3 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 70 ஆயிரத்து 375 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர்கள் 42 பேர் என மொத்தம் 3 லட்சத்து 34 ஆயிரத்து 420 வாக்காளர்கள் உள்ளனர்.
பொள்ளாச்சி தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து77 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 79 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர்கள் 43 பேர் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 199 வாக்காளர்கள் உள்ளனர்.
வால்பாறை தனித்தகுதியில் 98ஆயிரத்து 727 ஆண் வாக்கா ளர்களும் 1 லட்சத்து 7 ஆயிரத்து 827 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர்கள் 21 என மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 575 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் 6 ஆயிரத்து 884 பேர் ,முகவரி மாறி சென்றவர்கள் 5 ஆயிரத்து 12 பேர், இரு முறை பதிவு செய்த 1591 பேர் என 14ஆயிரத்துன387 பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்



