fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கபடி போட்டி : என்ஜிபி கல்லூரி அணி சாம்பியன்

கோவை மாவட்ட கபடி போட்டி : என்ஜிபி கல்லூரி அணி சாம்பியன்

கோவை காளப்பட்டி அருகில் கைக்கோளபாளையத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதி விளையாட்டு குழுவின் சார்பில் 35-ம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் மாவட்ட அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றன.

போட்டியில் என்ஜிபி கல்லூரி அணி முதல் இடத்தையும், பேரூர் சிறகுகள் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பையும், பரிசுத் தொகையையும் வழங்கினர்.

எஸ்எஸ்குளம் ஒன்றியத் தலைவர் கவிதா சண்முகசுந்தரம் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை பாரதி விளையாட்டு குழுவின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img