கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார அலுவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கொரோ னா தொற்று மூன்றாவது அலை, பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது இருக்கிறது. இம்மாத துவக்கத்தில், 75 ஆக இருந்த பாதிப்பு, நேற்றைய தினம், 2 ஆயிரத்தை கடந்தது.
இதனிடையே கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் மற்றும் மாநக ராட்சி சுகாதார அலுவலர் சதீஸ்குமார் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் வீட்டுத்தனிமையில் இருக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுவோர்யாராக இருந்தா லும், சளி பரிசோதனை செய்துகொள்ள, அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
தற்போதைய மூன்றாவது அலையில் நுரையீரல் பாதிப்பு இல்லாததால், ஆக்சிஜன் பிரச்சினை எழவில்லை. வீட்டுத்தனிமையில் இருந்து, மருந்து மாத்திரை உட்கொண்டால், வெகு விரைவில் குணமாகி விடுகின்றனர்.
தொடர்ச்சியாக, மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லாவிட்டாலோ அல்லது, 5 அல்லது, 6 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருந்தாலோ போது மானதாக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.



