கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கொடீசியா சிறப்பு சிகிச்சை மையத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) அருணா, மாநகர சுகாதார அலுவலர் சதீஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.



