fbpx
Homeபிற செய்திகள்கோவை கிர்லோஸ்கர் நிறுவனத்திற்கு சி.எம்.ஓ. ஆசியா அமைப்பு விருது

கோவை கிர்லோஸ்கர் நிறுவனத்திற்கு சி.எம்.ஓ. ஆசியா அமைப்பு விருது

உலக அளவில் நீர் மேலாண்மையில் சிறந்த தீர்வுகள் வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு, சி.எம்.ஓ. ஆசியா அமைப்பு ‘தொழில்துறை உற்பத்தியில் நெறிமுறை நிறுவனப்’ பிரிவில் மதிப்புமிக்க இந்தியாவின் ‘நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றிய மிகச் சிறந்த நிறுவனம்’ என்ற விருதை வழங்கி உள்ளது.

இந்நிறுவனத்தின் தொழிற்சாலை கோவையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சி.எம்.ஓ. ஆசியா என்பது ஆலோசனைக் குழுவால் வழிநடத்தப்படும் ஒரு தனித்து இயங்கக்கூடிய மற்றும் லாப நோக்கமில்லாத அமைப்பாகும்.

கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு இந்த விருது கிடைத் திருப்பது என்பது விழிப்பு ணர்வு அணுகுமுறையுடன் இணைந்து சமூகப் பொறுப்புடன் வணிகத்தை நடத்தும் அதன் முக்கிய கொள்கை மற்றும் அதன் தத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

இந்நிறுவனம் உலகின் சிறந்த மற்றும் மிகப்பெரிய பம்ப் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இது பொறியியல் மற்றும் நீர் மேலாண்மைக்கான திட்டங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் கடந்த 1888-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

அதன் செயல்பாடுகள் 1920-ஆம் ஆண்டிலிருந்து நடைபெறுகிறது. இது 2.1 பில்லியன் டாலர் வர்த்தகம் மேற்கொள்ளும் கிர்லோஸ்கர் குழுமத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும்.

இந்த விருது கிடைத்திருப்பது குறித்து கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் திருமதி ரமா கிர்லோஸ்கர் கூறுகையில், இந்தியாவின் ‘நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றிய மிகச் சிறந்த நிறுவனம்’ என்ற விருது கிடைத்திருப்பது என்பது நாங்கள் எங்கள் வணிகத்தை நடத்தும் ஒழுங் கின் பிரதிபலிப்பாகும்.

எங்கள் நிறுவனம் துவக்கப்பட்ட நாள் முதல் எங்களின் மதிப்புமிக்க செயல்பாடுகள் மூலம் எங்கள் பங்குதாரர்களின் முத லீட்டைப் பராமரிப்பதிலும் அதை அதிகரிப்பதிலும் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.

நாங்கள் வகுத்துள்ள எங்களின் நெறிமுறைகள் ஊழியர்களுக்கான சிறந்த வழிகாட்டியாக இருப்பதோடு, அது எங்களின் வணிகம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பணியாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளின் போது சட்ட மற்றும் நெறிமுறை சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த விருதானது இந்நிறுவனத்தின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. ஏனெனில், ‘தொழில்துறை உற்பத்தியில் இந்தியாவின் ‘நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றிய மிகச் சிறந்த நிறுவனம்’ என்ற விருது இந்நிறுவனத்திற்கு கடந்த 2014-ஆம் ஆண்டு உலக சி.எஸ்.ஆர். காங்கிரஸ் அமைப்பால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img