fbpx
Homeபிற செய்திகள்கோவை ஐ.என்.எஸ். அக்ரானியில் தெற்கு கடற்படை அதிகாரி ஆய்வு

கோவை ஐ.என்.எஸ். அக்ரானியில் தெற்கு கடற்படை அதிகாரி ஆய்வு

கடற்படையின் தெற்கு கட்டளை அதிகாரி துணை அட்மிரல் ஏ.கே.சாவ்லா கோவையில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானி தலைமைத்துவ மற்றும் மேலாண்மை பயிற்சி நிறுவனத்திற்கு நேற்று வருகை புரிந்தார்.

தெற்கு மண்டல கடற்படை மனைவிகள் நலச்சங்கத் தலைவர் சபனா சாவ்லாவும் உடன் வந்திருந்தார். இந்நிகழ்வில் அட்மிரல் ஏ.கே.சாவ்லா, மாலுமிகளின் கௌரவ மரியாதையைப் பெற்றுக் கொண்டதுடன், ஐ.என்.எஸ். அக்ரானியின் உட்கட்டமைப்புகளை மீளாய்வு செய்தார்.

பின்னர் விடுதி, பொழுதுபோக்கு வளாகமான “நொய்யல்” மற்றும் “பழமுதிர் தோட்டம்“ நிலைய கழிவு மேலாண்மை ஆலை ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார். இந்த கழிவு மேலாண்மை ஆலையால் பூஜ்ஜிய கழிவு உற்பத்தி தளமாக மாறும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் இவர் பாதுகாப்பு சிவிலி யன் ஊழியர்கள் உட்பட கடற்படை வீரர்களுடன் உரையாடியதுடன் இந்திய கடற்படையின் மாலுமிகளுக்கு தலைமைத்துவ மற்றும் மேலாண்மை திறன்களை வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.

தெற்கு மண்டல கடற்படை மனைவிகள் நலச்சங்க தலைவர் சபனா சாவ்லா, கடற்படை அதிகாரி கள் குடியிருப்பில் “ஓயாசிஸ்” என்ற ஆரோக்கிய பூங்காவை திறந்து வைத்ததுடன் அனைத்து பெண்களுடனும் உரையாடினார்.

இதைத் தொடர்ந்து சூலூர் விமானப்படை தளத்துக்கு ஏ.கே.சாவ்லா சென்றார். அங்குள்ள விமானம், என்ஜின் ஹோல்டிங் யூனிட்டின் 60 வது ஆண்டு விழாவில் பங்கேற்றார்.

படிக்க வேண்டும்

spot_img