முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிறந்தநாள் விழாவை சமூக இடைவெளியுடன் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுகவினருக்கு அறிவுறுத்தி இருந்தார்.
அதன்பேரில் கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராம் தலைமையில் எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பொது மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோல் பேரூரில் அதிமுக பேரூர் ஒன்றியச் செயலாளர் ராமமூர்த்தி தலை மையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



