கொரோனா தொற் றில் இருந்து மீண்ட நோயாளிகள் கண் கருவிழிப்படல அழற்சி ஏற்பட்டால் நிரந்தரமாக பார்வை திறன் பாதிக்கப் படும் அபாயம் உள்ளதாக கோவை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை கண் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஜி.ஆதித்யா, டாக்டர் ஜெயஸ்ரீ, டாக்டர் அருணா பிரகாஷ் ஆகி யோர் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் நேற்று(17ம் தேதி) வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கூறியதாவது,
கோவை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 10 முதல் 15 வரை கருவிழிப்படல பாதிப்புள்ள நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
அதில் 5 புதிய நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என அறிய வருகிறது. இதன் அறிகுறி கண் சிவத்தல், வெளிச்சத்தை பார்க்க கண் கூசுதல், பார்க்கும் பொருள்கள் மிதப்பது போன்று தெரிதல், குறைந்து விட்ட பார்வை திறன் ஆகியவை கருவிழிப்படல அழற்சியின் ஆரம்ப நிலை அறிகுறிகளாகும்.
கோவிட்-19 தொற்றில் இருந்து மீண்ட நோயாளிகள் மேற்கண்ட அறிகுறிகள் இருக்கும் என்றால் உடனடியாக கண் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். இல்லை என்றால் பார்வை திறன் இழப்பு எற்படும் அபாயம் உள்ளது.
இதன் சிகிச்சைக்காக பாதிப் புகளை பொருத்து மாத்தி ரைகள் அல்லது சொட்டு மருந்துகள் வடிவத்திலான ஸ்டீராய்ட்களாக இருக்கிறது. கூட்டம் நிறைந்த பகுதிகளில் பொது மக்கள் கண்களை பாதுகாக்க கண் கண்ணாடி அணிவது அவசியம்.
கோவிட்-19 தொற்றில் இருந்து மீண்ட வர்கள் தாமாக முன்வந்து கண்மருத்துவரை பார்த்து கண்களை பரிசோதித்து கொள்வது நல்லது. இத னால் பூஞ்சை தொற்றில் இருந்து தப்பிக்க முடியும். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.



