கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கொண்டைய ம்பாளையம் ஊராட்சி கோட்டப்பாளையம் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விவசாயிகள், வீட்டு உரிமையாளர் களின் பட்டா மற்றும் நில சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அன்னூர் தாசில்தார் ரத்தினம், கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
துணை வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன் வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் பிரகாஷ் வரவேற்றார்.
இந்த முகாமில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பட்டா மாறுதல் மற்றும் நில அளவை குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்ராஜ் 6வது வார்டு உறுப்பினர் தீபன் குமார், 9வது வார்டு மோகன், பழனிச்சாமி, சாமிநாதன், முத்துக்குமார், ரவி மேஸ்திரி, நித்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



