ராமநாதபுரம் மாவட் டம் கீழக்கரை சேரான் தெருவில் ஷஹீத் மரக்கடை கமாலுதீன் திடலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மக்களாட்சி பாதுகாப்போம் என்ற தலைப்பில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் கொடி யேற்றம், புரட்சிப் பாடல் நாடகம், வினாடிவினா போட்டி, உடற்பயிற்சி வரலாற்று ஆசிரியர்களை கௌரவப்படுத்துதல், வெளிநாடு சென்று பல்வேறு பதக்கங்களை வென்றவர்களை கௌரவப்படுத்துதல், மற்றும் பரிசளித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. கட்சியின் கீழக்கரை நகர் தலைவர் அகமது நதீர் தலைமை தாங்கினார்.
ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ கட்சியின் கிழ க்கு நகர் தலைவர் நூருல் ஜமான் வரவேற் புரை வழங்கினார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு நகர் தலைவர் ஹமீது ஃபைசல் வாழ்த்துரை வழங்கினார்.
கீழக்கரை நகராட்சி சேர்மன் செஹனாஸ் ஆபிதா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் சக்கினா பேகம் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் முகைதீன் அப்துல் காதர், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கீழை ஜஹாங் கீர் அரூஸி தொகுப்புரை ஆற்றினார்.
மாநாட்டு குழுத் தலைவர் ஹமீது சாலிஹ் நன்றி கூறினார்.



