கோவை, காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பி.காம். பயிலும் பிரவீன் தியா கராஜன், தமிழ்நாடு கிரிக் கெட் அணியின் (19 வயதுக்கு கீழ்) தலைவராக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில், பிரவீன் தியாகராஜன் பேசிய தாவது:
ஊட்டி எனது சொந்த ஊர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தேன். பல சோதனைகள், தோல்விகளுக்கு நடுவில் மிகுந்த ஈடுபாட்டுடன் பயிற்சியில் பங்கு பெற்று விளையாடினேன். காருண்யாவில் சேர்ந்த பின்பு, விளையாட்டுத் துறையினரால் ஊக்கு விக்கப்பட்டேன்.
சிறந்த விளையாட்டு மைதானங் களும், நண்பர்களும் என க்கு வரப்பிரசாதமாக கிடைத்தன. என்னை ஊக்கப்படுத்திய அனை வருக்கும் நன்றி என்றார்.
கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட பிரவீனை பல்கலைக்கழக வேந்தர் பாராட்டி, சிறப்பாக விளையாடி பல வெற்றிக ளைப் பெற வேண்டும்.
வருங்காலத்தில் இந்திய அணியில் இடம் பெற்று புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்தினார். மாணவருக்கு முழு கல்விக் கட்டண சலுகை அளிக்கப்பட்டது. இது மாணவர்களிடம் உற் சாகத்தை ஏற்படுத்தி விளை யாட்டில் மாநில மற்றும் தேசிய அளவில் இடம் பிடிக்க உறுதுணையாக உள்ளது.
மாணவர் பிரவீனை, பல்கலைக் கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர், டிரஸ்டி சாமுவேல் தினகரன், பதிவாளர் எலைஜா பிளசிங் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.



