fbpx
Homeபிற செய்திகள்எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம்: கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம்: கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பலரும் பேசி வரும் நிலையில் எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று கோவையில் நடந்த கூட்டத்தில் அவரே விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டா லின் மகனான உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வந்தார்.

பின்னர் கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக இயங்க தொடங்கிய அவருக்கு திமுக இளை ஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் ஆனார் உதயநிதி ஸ்டாலின்.

சமீபமாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என்.நேரு, மூர்த்தி மற்றும் முக்கி யப் பிரமுகர்களும் வலியு றுத்தினர்.

இந்நிலையில் நேற்று கோவையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் அவர் அமைச்சராக வேண்டும் என வலியுறுத்தி பொங் கலூர் பழனிசாமி பேசினார்.

பின்னர் அதற்கு பதிலளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் “நான் எந்த பொறுப்புக்கும் ஒருநாளும் ஆசைப்படவில்லை. தலைவருக்கும், உங்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img