உலக அளவில் மிகவும் பிரப லமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் நிறுவனமான எல்சேவியர் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் கோவை கங்கா மருத்துவமனை மருத்துவர் எஸ். ராஜசேகரன் 139- வது இடத்தைப் பிடித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள 100,000 -க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் பங்களிப்பை வகைப்படுத்திய, பல்வேறு துறைகளில் 2% பங்களிப்பைக் கொண்ட விஞ்ஞானிகளின் பட்டியலை அமெரிக்காவின் எல்சேவியர் நிறுவனம் வெளி யிட்டுள்ளது.
எல்சேவியர் பொதுவில் கிடைக்கக் கூடிய 100,000 சிறந்த விஞ்ஞானிகளின் தரவுத்தளத்தை உருவாக்கியுள்ளது.
இது மேற்கோள்கள்,h-index, co-authorship சரி செய்யப்பட்ட hm-index, வெவ்வேறு ஆசிரியர் நிலைகளில் உள்ள ஆவணங்களுக்கான மேற் கோள்கள் மற்றும் ஒரு கூட்டு குறிகாட்டி போன்ற பல் வேறு அளவீடுகள் பற்றிய தரப்படுத் தப்பட்ட தகவல்களை வழங்கு கிறது.
மொத்தம் 1,90,064 உலக விஞ்ஞானிகள் பட்டியலிடப் பட்டுள்ளனர். இதில் 3,353 இந்திய ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். 1,425 எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மேற்கோள் காட்டப்பட்டுள்ளனர். இதில் டாக்டர் எஸ். ராஜசேகரன் உலகிலேயே 139-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
எலும்பியல் அறுவை சிகிச்சை துறையில் டாக்டர் ராஜசேகரனின் ஆராய்ச்சி குறிப்பாக, முதுகெலும்பு நோய்த் தொற்றுகள், முதுகெலும்பு குறைபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
பல வெளியீடுகளில், டாக்டர் எஸ். ராஜசேகரனின் சிறந்த 227 சர்வதேச ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச பகுப்பாய்வுக்காக பரிசீலிக்கப்பட்டன.
டாக்டர் ராஜசேகரனின் முதல் ஆய்வுக் கட்டுரை 1987-ல் வெளி யிடப்பட்டது. இவர் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவுடன், முதுகெலும்பு காசநோய் மற்றும் பிற நோய்த்தொற்றுகளைத் தொடர்ந்து கடுமையான முது கெலும்பு குறைபாடுகள் குறித்த இந்தக் கட்டுரை அமெரிக்க ஆய்விதழில் வெளியிட்டார்.
இவரது ஆய்வுகள் மருத்துவம் மற்றும் அடிப்படை அறிவியல் இரண்டையும் இணைத்து பாலமாகச் செயல்படுகிறது.
இவர் ஆகஸ்ட் 2002-ல் கங்கா எலும்பியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையை நிறுவி னார். இது கங்கா ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சிக்கு நிதி அளித்து வருகிறது.



