fbpx
Homeபிற செய்திகள்உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு: வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு ரத்து

உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு: வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு ரத்து

தமிழகத்தில் பிற்படுத் தப்பட்டோருக் கான ஒதுக்கீடு பிரிவில் வன்னியர் களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வன்னியர்கள் பிற்படுத்தப்பட்டோருக் கான பிரிவில் உள்ளனர். மொத்த இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியின் போது பிப். 28-ல் நடைபெற்ற கடைசி நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கினார்.

இந்நிலையில் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பிற்படுத்தப் பட்டோர் பிரிவைச் சேர்ந்த பல்வேறு சாதிகள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பல்வேறு சாதிகள் உள்ளன.

முறையாக கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதம். 68 சமூகங்களைக் கொண்ட சீர் மரபினருக்கு 7 சதவீதமும், எஞ்சிய 40 சமூகத்தினருக்கு 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மற்ற சாதியைச் சேர்ந்த மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கணக்கொடுப்பு நடத்தாமல் வன்னியர் களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை எம்.துரைசாமி, டி.முரளி சங்கர் அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்து நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில் இடஒதுக்கீடு பிரிவில் பல்வேறு சாதிகள் உள்ளன. அப்படியிருக்கும்போது முறையாக கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

இதனால் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத் தத்தை ரத்து செய்கிறோம் என கூறியுள்ளனர். இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறிய பா.ம.க. கட்சியின் வழக்கறிஞர் பாலு, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழக அரசு மேல்முறையீடு: மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
மேல்முறையீடு குறித்து தமிழக அரசு வழக்கறிஞரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படிக்க வேண்டும்

spot_img