fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவை அச்சுறுத்தும் ஒமைக்ரான்- இதுவரை 213 பேருக்கு பாதிப்பு: பிரதமர் மோடி நாளை அவசர ஆலோசனை

இந்தியாவை அச்சுறுத்தும் ஒமைக்ரான்- இதுவரை 213 பேருக்கு பாதிப்பு: பிரதமர் மோடி நாளை அவசர ஆலோசனை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு, ஒமைக்ரான் அச்சுறுத்தல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதி வேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த 2ம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவிய தின் மூலம் நாட்டில் ஒமைக்ரான் அடியெடுத்து வைத்தது. இந்தியாவில் 14 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. மொத்தம் 213 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வேகமாக பரவத் தொடங்கியிருக்கும் நிலையில், மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது: கொரோனா தொற்று பரவல் 10% மேல் இருந்தால், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும். டெல்டாவை விட ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று 3 மடங்கு வேகமாக பரவக் கூடியது என்பதால் மருத்து வமனைகளில் படுக்கை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் வசதி இருப்பை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்.இவ் வாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இந்தநிலையில், கொரோனா பாதிப்பு, ஒமைக்ரான் அச்சுறுத்தல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளார். மேலும், இந்தியாவில் 213 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கை குறித்து மோடி ஆய்வு மேற்கொள்கிறார்.

ஒமைக் ரானை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நட வடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும், மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவ டிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img