fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவில் மேலும் 10 ஷோரூம்களை திறக்க மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திட்டம்

இந்தியாவில் மேலும் 10 ஷோரூம்களை திறக்க மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திட்டம்

இந்தியாவில் 10 ஷோரூம்கள் உள்பட ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் 22 ஷோரூம்களை இந்த ஆண்டு துவக்க உள்ளது.

ஜனவரியில் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இக்குழுமம் மொத்தமாக ரூ.800 கோடி முதலீடு செய்கிறது. மலபார் கோல்டு டைமண்ட்ஸ் 750 ஷோரூம்களை துவக்கும் நோக்கத்தைக் கொண்டு, உலகிலேயே ஷோரூம்கள் அதிகம் கொண்ட தங்க விற்பனை வர்த்தகராக உருவாக வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண் டுள்ளது.

இந்த வர்த்தக விரிவாக்கத் திட்டத்தின் கீழாக தங்க நகை வர்த் தகத்தில், சில்லரை வர்த்தகம், உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் துறைகளில் 5 ஆயிரத்துக்கும் மேலாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அகமது தெரிவித்தார்.

இந்தியாவில் தயாரிப் போம், உலக சந்தைக்கு கொண்டு செல்வோம் (Make in India and Market in the world) என்பதே எங்களது குறிக்கோள். பன்னாட்டு அளவில் இந்திய தங்க நகைகளுக்கு ஒரு சிறப்பான பிராண்ட் நன்மதிப்பை உருவாக்கி, மேலும் உள்நாட்டில் வர்த்தகத் துறையில் பல வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி உள்ளோம். இது எங்களது கொள்கையாக உள்ளது என்று எம்.பி. அகமது மேலும் தெரிவித்தார்.

மலபார் குழுமத்தின் துணைத் தலைவர் அப்துல் சலாம் கே.பி. கூறும்போது, எங்களது வருங்கால வளர்ச்சியை காண்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளோம்.

ஒருபக்கத்தில், நாங்கள் பெங்களூரில் துவக்க உள் ளதைப் போல புதிய கலைநயம் கொண்ட தயாரிப்புகளுக்கான பிரத்யேக ஆர்டிஸ்ட்ரீ ஸ்டோர்கள் மூலமாகவும் மற்றொரு பக்கம் பாரம்பரிய ஷோரூம்கள் ஆகிய இரண்டையும் இந்தியாவின் பெரிய மற்ற சிறிய நகரங்களிலும் தொடர்ச் சியாக துவக்க உள்ளோம் என்றார்.

இந்திய தங்க நகை தயாரிப்புகளை சமீப காலத்தில் பன்னாட்டு அள வில் வெகுவாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக மற்றும் நம்பக்கூடியதாக மாற்றுவதில் மலபார் வெகு முக்கிய பங்களிப்பை அளித்திருக்கிறது என்றார் சர்வதேச செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனர் ஷாம்லால் அஹமத்.

படிக்க வேண்டும்

spot_img