fbpx
Homeபிற செய்திகள்இந்திய விமானப்படையில் பைலட் பயிற்சிக்கு கே.பி.ஆர். கல்லூரி முன்னாள் மாணவர் தேர்வு

இந்திய விமானப்படையில் பைலட் பயிற்சிக்கு கே.பி.ஆர். கல்லூரி முன்னாள் மாணவர் தேர்வு

இந்திய விமானப் படையின் போரிடும் விமானங்களை இயக்கும் பயிற்சிக்கு கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஏ. பிரணவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையில் பயின்று பட்டம் பெற்றவர் திருப்பூரைச் சேர்ந்த ஏ.பிரணவ்.சிறுவயது முதலே விமானப்படையில் பைலட் ஆக வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இருந்தது.

இந்த எண்ணம் வளர, வளரபள்ளி, கல் லூரி படிப்புகளில் உறுதியான முடிவுடன் முயற்சி செய்தார். அவரது இந்த முயற்சிக்கு அவரது பெற்றோர், ஆசிரியர்கள் ஊக்கமும் உற்சாகமும் அளித்து வந்தனர்.

பிரணவ் கூறுகையில், கேபிஆர் கல்லூரியின் பல்வேறு கிளப்களில் குழுக்களாக சேர்ந்து சிறப்பாக செயல்பட்டது எனது குறிக்கோளை அடைய சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

‘பாஜா’ போட்டியில் பங்கு பெற்றது, முன்னணி தொழில் நிறுவனங்களில் கல்லூரி சார்பில் களப் பயிற்சி (Internship) பெற்றது, கல்லூரி செயல்படும் போதுபல் வேறு கிளப்களில் சேர்ந்து சிறப்பாக செயல்பட்டது, கல்லூரியின் வழிகாட்டுதலில் பல்வேறு ஆன்லைன் பாடத்திட்டங்களில் சேர்ந்து பயிற்சி பெற்றது போன்றவை தன்னம்பிக்கைக்கு வலுசேர்த்தது.

கல்லூரியில் படிக்கும் போது சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டு, விழா வில் மத்திய அமைச்சர் பக்கன்சிங் குலஸ்தேவிடம் விருது பெற்றேன். கல்லூரி படிப்பிற்குப் பின் நகரில் உள்ள விமான பயிற்சி அகாடமியில் சேர்ந்தேன்.

அங்கு ஈசனின் பயிற்சியும், வழி காட்டுதலும் தேர்ச்சிக்கு பெரிதும் உதவியது என்றார். “மாணவனின் கடின உழைப்பும் விடா முயற்சியும், பயிற்சியும் இந்த வெற்றியை தந்துள்ளது.

அவரது பணி சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி தெரிவித்துள்ளார்.

கல்லூரி முதல்வர் முனைவர் மு.அகிலா கூறுகையில், இவரால் இந்தகல்லூரி பெருமை கொள்கிறது. ராணுவத் துறையில் சேர ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கல்லூரியும், கல்லூரியில் செயல்பட்டு வரும் என்சிசி அமைப்பின் மூலம் சிறப்பான உதவி செய்ய முடியும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img