fbpx
Homeபிற செய்திகள்இணைய வழி காணொலி காட்சி மூலம் கோவை விவசாயிகள் குறை தீர்கூட்டம்

இணைய வழி காணொலி காட்சி மூலம் கோவை விவசாயிகள் குறை தீர்கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இணையவழியாக காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இணையவழியில் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, விவசாயிகள் 12 வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் Zoom App மூலம் இணைய வழியாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர்.

வேளாண்மை துறையின் வாயிலாக சிறு விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் மற்றும் நுண்ணீர் பாசனத் திட்டம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்கள் பரப்பு அதிகரித்தல் தட்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்புகள் நீடித்த நிலையான மானவாரி இயக்கம் உணவு தானிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேளாண் மைத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், உதவி ஆட்சியாளர் (பயிற்சி) சரண்யா, வேளாண்மை இணை இயக்குநர் சித்ரா தேவி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img