fbpx
Homeபிற செய்திகள்இடமாறுதல் கலந்தாய்வு: தவறான தகவல்களை நம்ப வேண்டாம் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிக்கை

இடமாறுதல் கலந்தாய்வு: தவறான தகவல்களை நம்ப வேண்டாம் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிக்கை

இடமாறுதல் கலந்தாய்வு குறித்த தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டின் முதல்வராக தி.மு.க. தலை வர் மு.க.ஸ்டாலின் பதவி« யற்ற பின்னர், 2019-ம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக பணியிடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களை, மீண்டும் அதே இடத்தில் பணியி டமாறுதல் செய்யப்பட்டனர்.

பல்கலைக்கழகங்களில் எம்.பில். ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்து நடத்துவதற்கு டான்சி அமைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்ப முறை திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைக் கூட்டுப் பல்கலைக்கழகமாக மாற்றவும், கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே நிரப்பவும் நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாட்டின் முதல்வர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

இதேபோல் தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள பொது பணியிடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று இக்கழகம் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் இசைவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கல்லூரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் நடைபெறாது என்றும், விருப்பம் உள்ளவர்கள் உயர்கல்வித்துறையிடம்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

இது கல்லூரி ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேநேரத்தில் உயர்கல்வித்துறையின் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாக உள்ளது.

கொரோனா பெருந்தொற்று முழுமையாகக் கட்டுக்குள் வந்தவுடன், கலந்தாய்வு நடத்தப்படும் என்ற அரசின் உறுதிமொழியை அரசு கல்லூரி ஆசிரியர்கள் நம்பினால் போதுமானது.

துவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img