தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய உத்தரவின்படி தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022 முன்னிட்டு நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யும் பணி தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் தருமபுரி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் / தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி முன்னிலையில் நடைபெற்றது.



