தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (பிப்.19) நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர்க் காவல் படை, முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற காவலர்கள் என 1,13,073 பேர் ஈடுபட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள் ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன.
இவற்றில் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தல் நாளை நடக்கிறது. அரசியல் கட்சிகள் அடிப்படையில் நடக்கும் இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
218 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதம் உள்ள வார்டுகளுக்கு 57,600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.
இன்று காலை 11 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான 80 வகையான பொருட்கள், கொரோனா பாதுகாப்புக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணி யில் 1 லட்சத்து 13 ஆயிரம் காவலர்கள் ஈடுபட இருப்பதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சைலேந்திரபாபு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத் தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு வருகிற 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
31,150 வாக்குச்சாவடிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் இத்தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, தகுந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர் கூடுதலாக நியமிக்கப்பட்டு, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே வாக்குப்பதிவு தொடர்பான நம்பிக்கையை வளர்க்கும் வகையில் கொடி அணி வகுப்புகள் நடத்தப்பட்டது. தேர்தல்தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த தேர்தலில் நடைபெற்ற குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மேல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியயமான முறையில் வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடைபெற 1,343 நிலைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் நிலவும் பகுதிளுக்கு விரைந்து சென்று தீர்வு காணும் வகையில் 846 அதிரடிப்ப டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத மதுபான விற்பனைகள், ஆயுதங்கள் கடத்துவது, மற்றும் தேர்தல் நடை பெறும் இடத்திற்கு சம்பந்தமில்லாத நபர்கள் வருவதை தடுக்கும் பொருட்டு 455 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறை யில் நடக்கும் வகையில், தாலுக்கா மற்றும் ஆயுதப் படையினை சேர்ந்த 17,788 காவல் அதிகாரிகளும், 71,074 ஆண் மற்றும் பெண் காவலர்களும், தமிழ்நாடு சிறப்பு படையினைச் சேர்ந்த 9,020 காவலர்கள் உள்ளிட்ட 97,882 காவல் அதிகாரிகள் மற்றும் காவ லர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
12,321 ஊர்க்காவல் படையினரும், 2,870 முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற காவலர்கள் என 1,13,073 ஆளிநர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு கரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றதக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்தேர்தல் தொடர் பான தகவல்களை தெரிவிக்க பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாவட்டம் மற்றும் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதற்கிடையே, கள்ள ஓட்டுபோடுவதைத் தடுக்கவும், கலவரங்கள் ஏற்படாமல் இருக்கவும் போலீஸார் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் பிரச்சா ரத்துக்காக வெளியூர்களில் இருந்து ஆட்கள் ஆங் காங்கே விடுதிகளில் தங்கி இருந்தனர். நேற்றுடன் பிரச்சாரம் முடிவடைந்ததால், அன்றை யதினமே வெளியூர் நபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்என்று போலீஸார் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, நேற்று மாலை முதல் விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
வெளியூர் நபர்கள் தங்கி இருந்தால், அவர்கள் எதற்காக வந்துள்ளனர், அதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த சோதனை நடந்து வருகிறது.
இதேபோல் கடைசி நேர பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் நோக்கில் தேர்தல் பறக்கும் படையினரும், கலவரங்கள் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சந்தேகத்துக்குரிய நபர்கள் யாராவது வருகிறார்களா, வெடி பொருட்கள், ஆயுதங்கள் எதுவும் இருக்கிறதா என உள்ளூர் போலீஸாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, 74 ஆயிரம் போலீஸார், தமிழக சிறப்பு காவல் படையினர் 8 ஆயிரம் பேர், ஊர்க்காவல் படையினர் 14 ஆயிரம் பேர் என தமிழகம் முழுவதும் 96 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.



