fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல்- கல்லூரி- எல் அண்ட் டி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல்- கல்லூரி- எல் அண்ட் டி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் எல் அண்ட் டி தொழில்நுட்ப சேவை பிரிவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், எல் அண்ட் டி தொழில்நுட்ப சேவை பிரிவில் தலைமை மனிதவள மேம்பாட்டு அதிகாரி எம்.லட்சுமணன், எஸ் என் ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயண சுவாமி ஆகியோர் கையொப்பமிட்டனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர் அலமேலு வரவேற்றார். இக்கல்லூரியின், சிறப்பு பாடத்திட்டங்களில் வளர்ந்துவரும் களங்களான சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ஆக்கு மெண்டெட் மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டி, ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன், சென்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்சார வாகனம் ஆகியவற்றை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் எல் அண்ட் டி ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் உதவி கொண்டு வரையறுக் கப்பட்டுள்ளது.

எனவே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கல்லூரி மாணவர்கள் இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்பு பெறவும், கல்லூரி பேராசிரியர்கள் சைபர் பாதுகாப்பு மற்றும் சிறப்பு ஆசிரியர் பயிற்சி பெற பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கிறது.

சிறந்த கண்டுபிடிப்பு மையம் உருவாக்கி, அதன்மூலம் மேற்கூறிய களங்களில் சிறப்பு சான்றிதழ் கள் மாணவர்கள் பெற உறுதுணையாக இருக்கும்.

டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தலைமை நிதின் ஜெயின், டிஜிட்டல் தயாரிப்புகளின், தலைமை அதானு நியோகி, டிஜிட்டல் ஹெல்த் தலைமை முகுந்த குமார், பிரகாஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

கல்லூரியின் தொழில் தொழில் துறை இணைப்பின் ஆலோசகர் கணேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img