fbpx
Homeபிற செய்திகள்அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு

அரியலூர் மாவட்டம், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜெ.தத்தனூர், செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட் பட்ட செந்துறை ஊராட்சி, ஜெயங்கொண்டம் நகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி நேற்று முன்தினம் (செப்.16) பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

செய்தியாளர்களிடம் இத்திட் டங்கள் குறித்து ஆட்சியர் கூறிய தாவது: ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் சாலை வசதி மேம்பாடு குடிநீர் வசதி ஏற்படுத்துதல் தெரு விளக்கு அமைத்தல் தனிநபர் இல்லக் கழிவறை அமைத்தல், அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டுதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளுதல், பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடுகட்டும் திட்டம் உள்ளிட்டவை மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜெயங்கொண்டம் ஒன்றியத் திற்கு உட்பட்ட ஜெ.தத்தனூர் ஊராட்சியில் சாலை மேம்பாடு செய்தல் திட்டத்தின் கீழ் தா.பொட்டக் கொல்லை முதல் வளவெட்டி குப்பம் வரையிலான 0.96 கி.மீட்டர் நீளமுள்ள சாலை ரூ.49.97 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

சாலை முழுவதும் நடந்து சென்று சரியான அளவில் மற்றும் தரத்தில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதா என ஆட்சியர் பார்வையிட்டார். சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்கள் வசதி ஏற்ப டுத்திடவும் சாலைகளுக்கு இடையே மழைநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலம் சரியான அளவில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அவர் ஆய்வு மேற் கொண்டார்.

தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் ரூ.21.55 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள் ளது நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தனித்தனியாக சேகரித்து தொட்டிகளில் கொட்டப்பட்டு, மக்கும் குப்பையில் இருந்து உரமாக மாற்றும் தொழில் நுட்பம் குறித்தும் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் இந்த உரங்களை விநியோகம் செய்வது குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார் மாவட்ட ஆட்சியர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தத்தனூர் ஊராட்சியில் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது மரக்கன்றுகள் உற்பத்தி மையம்.

இங்கு புளியங் கன்று, வேம்பு, நாவல், வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, இதன்மூலம் இவ்வூராட்சியில் மரக்கன்றுகள் நடவு செய்து, பராமரிக்கப்படும் பணிகள் குறித்தும்,ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு இயற்கை உரம் கூடத்தை யும் ஆட்சியர் பார்வை யிட்டார்.

இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் குறித்தும், விவசாயிகளுக்கு விநியோகிக்கும் பணிகளையும் அவர் கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து கால் நடை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கால்நடை மருத்துவமனை வாயிலாகபயன் பெற்று வரும் பகுதிகள், கால் நடைகளின் எண்ணிக்கை, கால் நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துப்பொருட்களின் இருப்பு குறித்து பார்வை யிட்டு ஆய்வு செய்தார் ஆட்சியர்.

கிராம மக்களின் பொருளாதா ரத்தின் முதுகெலும்பாக விளங் கும் கால்நடைகளுக்காக, தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மூலமாக விவசாயிகள் அதிகளவில் பயன்பெறும் வகையில் பணியாற்ற கால்நடை மருத்துவர்களுக்கு ஆட்சியர் அறிவுறித்தினார்.

ஜெயங்கொண்டம் நகராட் சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப் பட்டு வரும் குப்பை தரம் பிரிக் கும் மையத்தின் கட்டுமான பணிகள், செங்குந்தபுரத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் புதிய நியாய விலைக் கடை கட்டுமானப் பணிகள், மேலக் குடியிருப்பு கிராமத்தில் ரூ.9.60 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அங்கன் வாடி மைய கட்டிட கட்டுமானப் பணிகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார் ஆட்சியர்.

கட்டுமானப் பணிகளை உயர்ந்த தரத்துடன் விரைந்து முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

ரூ.3 கோடி மதிப்பீட்டில் 18 பேருந்துகள் நிற்கும் வகையில், 2 ஓய்வறைகளுடன், 26 கடைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார் ஆட்சியர்.

பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசால் செயல் படுத்தப்படும் இது போன்ற திட்டங்களின் கட்டுமானப் பணிகளை உயர்ந்த தரத்துடன் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

செய்தியாளர் பயணத்தின் போது, திட்ட இயக்குநர் (ஊரகவளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், செயற் பொறியாளர் ராஜராஜன், நகராட்சி ஆணையர் சுபாஷினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், குரு நாதன், ஒன்றியப் பொறியாளர் நடராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img